Posts

சிலப்பதிகாரம்

1. மதுராபதி சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக், குவளை உண்கண் தவளவாள் முகத்தி, கடைஎயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி; இடைநிலை விரிந்த நித்தில நகைத்தி, இருமருங்கு இருண்ட நீலம் ஆயினும், வலமருங்கு பொன்னிறம் புரையும் மேனியன்! இடக்கை பொலம்பூந் தாமரை ஏந்தினும், வலக்கை அஞ்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்; வலக்கால் புனைகழல் கட்டினும், இடக்கால் தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள், பனித்துறைக் கொற்கைக் கொண்கன், குமரித் துறைவன், பொற்கோட்டு வரம்பன், பொதியிற் பொருப்பன், குலமுதற் கிழத்தி; ஆதலின்-அலமந்து, ஒருமுலை குறைத்த திருமா பத்தினி, அலமரு திருமுகத்து ஆயிழை நங்கை-தன் முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றிக் *கேட்டிசின் வாழி, நங்கை! என் குறை என -i) வதும்) 10 15 தாழ்ந்த சடையும் இளம்பிறையும் உடைய சென்னியாள்: குவளை மலர் மையுண்டது போன்ற கண்ணினாள்; வெள்ளிய ஒளிபொருந்திய முகத்தினாள்; கடை எயிற்றிலே ஊறல் அரும்பிய பவளச் செவ்வாயாள்; தம்மிடத்திலே நிலவொளி விரிந்தது போன்ற முத்துப்பற்களை யுடையாள்; இடப்பாகம் இருண்ட நீலமாகத் தோன்றினும், வலப்பாகம் பொன்னிறமாக விளங்கும் மேனியாள்; இடக்கையிலே பொன்னிறமான மலர்ந்த தாமரை மலரை ஏந்தியிருப்பினும...